வசந்த் ரவியின் ஹாரர் படமான ‘அஸ்வின்ஸ்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!
June 22, 2023 / 11:40 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்த் ரவி. இவர் நடிப்பில் ‘அஸ்வின்ஸ், ஜெயிலர், வெப்பன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள ஹாரர் ஜானர் படமான ‘அஸ்வின்ஸ்’-ஐ இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதயாதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு விஜய் சித்தார்த் இசையமைத்துள்ளார், ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
படத்தை நாளை (ஜூன் 23-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் ‘அஸ்வின்ஸ்’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
Had a great opportunity to witness #Asvins Movie in a special screening. Believe me when I say, prepare yourself for an awe-inspiring blockbuster that will leave you breathless! It's the next big thing in Kollywood this year . Congrats @iamvasanthravi@taruntejafilmpic.twitter.com/tTl5pEwLeX
Caught the Press show of #Asvins. Those who know me, know I'm not a fan of horror films, as I don't believe in paying money to get scared. Asvins however, was a very interesting watch, thanks to great acting, powerful sound design and a gripping screenplay. Await detailed review! pic.twitter.com/QhwZOWP8Xx