வேதிகாவின் வேற லெவல் வைப் வீடியோ

  • December 20, 2022 / 06:50 PM IST

மதராஸி என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா . இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் முனி . நடிகர் லாரன்ஸ் இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தார்.படத்தையும் அவரே தான் இயக்கி இருந்தார் .ராஜ்கிரண் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் வேதிகாவிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது .அதன் பிறகு சக்கரக்கட்டி , காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார் வேதிகா . இந்த இரண்டு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

அதன் பிறகு அருண் விஜய் நடிப்பில் வெளியான மலை மலை என்கிற படத்தில் நடித்து இருந்தார் .இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .அதன் பிறகு இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பாலா படத்தில் நடித்தார் .இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது .அதன் பிறகு இவர் நடித்த படம் காவியத்தலைவன் . ப்ரித்விராஜ் , சித்தார்த் ஆகியோர் இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தனர் .

காஞ்சனா 3 படத்தில் நடித்தார் வேதிகா .இந்த படமும் நல்ல வெற்றியை பெற்றது .அதன் பிறகு தற்போது வினோதன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் . அந்த வகையில் இவர் தற்போது ஆங்கில பாடலுக்கு வைப்பாகும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus