ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் OST வெளியானது !

  • February 13, 2023 / 05:57 PM IST

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம்’ வெந்து தணிந்தது காடு’ விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்து இருந்தனர் . எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்து இருந்தது .

இந்நிலையில் இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாகி இருந்தது . வெளியான பிறகு நடிகர் சிம்புவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது . மேலும் மல்லிப்பூ என்கிற பாடல் வெளியாகி வைரலானது . இந்த படத்தில் இடம்பெற்ற பிற பாடல்களுக்கும் , பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது .

 

தற்போது ‘ வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஓ.எஸ்.டி எனப்படும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியாகி வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus