தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கட்பிரபு மற்றும் அவரது சகோதரர் நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோர் லாக்டாவுனில் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு வெளியான “சென்னை 600028” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனரான வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி மற்றும் சென்னை 600028 பகுதி 2 ஆகிய படங்களை இயக்கினார்.
கலகலப்பான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் என இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது லாக்டவுனில் தளர்வு ஏற்பட்டுள்ளது, இதனால் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி இவர்களுடன் நண்பர்கள் வட்டாரம் சேர்ந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார்கள்.
இந்த பயணத்தில் நடிகர் கருணாகரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.