இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நட்சத்திரம் நாக சைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ என்ற ஆக்ஷன் த்ரில்லர் படம் எடுத்து வருகிறார் . படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே 12, 2023 அன்று படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். நாக சைதன்யா மற்றும் க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக ‘கட்’ என்று அழைக்கும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
இப்படத்தில் பிரியாமணி, அரவிந்த் சாமி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்கி, வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நாக சைதன்யாவின் காதலியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைக்கவுள்ளனர்.
#NagaChaitanya @chay_akkineni wraps up shooting for his upcoming film, #Custody! The film to release in theatres on May 12th!
A @vp_offl HUNT#CustodyOnMay12@IamKrithiShetty @thearvindswami @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @realsarathkumar #Priyamani @SS_Screens pic.twitter.com/BpqOocJtkq
— Srinivasaa Silver Screen (@SS_Screens) February 24, 2023