“அஜித்தின் ‘மங்காத்தா’வை ரீ-ரிலீஸ் பண்ணுங்க”… தயாரிப்பாளரிடம் ட்விட்டரில் கேட்ட வெங்கட் பிரபு!

  • March 16, 2021 / 08:08 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர். அஜித் 2007-யில் நடித்த ‘பில்லா’ படம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

நடிகர் ‘தல’ அஜித் – இயக்குநர் வெங்கட் பிரபு காம்போவில் ‘மங்காத்தா’ என்ற படம் 2011-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. தற்போது, இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் “தயாநிதி அழகிரி சார் வர மே 1-ஆம் தேதி தல-யின் 50-வது பிறந்த நாள். அதுனால, நம்ம தல-யின் 50-வது படமான ‘மங்காத்தா’வை உங்க influence use பண்ணி ஏப்ரல் 30-ஆம் தேதி ரீ-ரிலீஸ் பண்ணா, ரசிகர்களாகிய நாங்க உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருப்போம். பார்த்து செய்யுங்க” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus