The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

  • January 6, 2024 / 06:36 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ (The Greatest of all Time) பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார், ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மைக் மோகன், ஜெயராம், லைலா, அஜ்மல், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இப்படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus