Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’வின் மொத்த வசூல் இவ்ளோதானா?

  • February 19, 2024 / 01:37 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் நடித்த ஆக்ஷன் படமான ‘சைந்தவ்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெங்கடேஷின் 75-வது படமான இதனை ‘நிஹரிகா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.19.15 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus