Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • January 3, 2024 / 12:00 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் படம் ‘சைந்தவ்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வெங்கடேஷின் 75-வது படமான இதனை ‘நிஹரிகா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus