தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடிகியாக இருந்தவர் வாணி ஜெயராம் . 1971 இல் பாட ஆரம்பித்த 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களுக்குப் பின்னணிப் பாடல்களை பாடியுள்ளார் . ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் தனியார் ஆல்பங்களை பதிவு செய்தார் மற்றும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான தனி இசை நிகழ்ச்சிகளிலும் பாடி உள்ளார் .
வாணி ஜெயராம் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதுகளை மூன்று முறை வென்றார் மேலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில், தென்னிந்தியத் திரைப்பட இசையில் அவர் செய்த சாதனைகளுக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது – சவுத் என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுப்பு. இந்த செய்தி திரை உலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது மேலும் இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.