Vaadivaasal : சூர்யாவின் ‘வாடிவாசல்’-க்காக அமீரை நேரில் சந்தித்து பேசிய வெற்றிமாறன்… வைரலாகும் ஸ்டில்!

  • November 28, 2023 / 02:44 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். இதில் மிக முக்கிய ரோலில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, இயக்குநர் வெற்றிமாறன் இன்று இயக்குநர் அமீரை நேரில் சந்தித்து இப்படத்தில் வலம் வரும் அவரின் கதாபாத்திரம் குறித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus