அந்த இன்வெஸ்டிகேசனுக்கு சப்போர்ட் பண்ணிய இயக்குநர் வெற்றிமாறன்!

  • July 21, 2020 / 03:35 PM IST

‘வம்சம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, அதன் பிறகு ‘மௌன குரு, டிமான்ட்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள்’ போன்ற பல படங்களில் நடித்தார். அருள்நிதி நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான படம் ‘K-13’. இதனைத் தொடர்ந்து ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தில் அருள்நிதி நடித்துள்ளார்.

என்.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் அருள்நிதியுடன் சேர்ந்து ஜீவாவும் நடித்துள்ளார். தற்போது, அருள்நிதியின் பிறந்த நாளான இன்று (ஜூலை 21-ஆம் தேதி) அவரின் கால்ஷீட் டைரியில் இணைந்திருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டைரி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கவுள்ளார்.

இவர் இயக்குநர்கள் அறிவழகன் மற்றும் அஜய் ஞானமுத்து இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இந்த படம் க்ரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் ரெடியாகவுள்ளதாம். இதன் டைட்டில் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus