தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘விடுதலை’. இதில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக வரும் என்றும், பார்ட் 1 வருகிற மார்ச் 31-ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி என தகவல் கிடைத்துள்ளது.