சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… முதல் நாள் வசூல் இவ்ளோவா?

  • April 1, 2023 / 07:29 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘விடுதலை’. இப்படத்தின் பார்ட் 1 நேற்று (மார்ச் 31-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, இயக்குநர் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.4.5 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus