வெற்றிமாறன் – சூரி – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விடுதலை’ பார்ட் 1… வெளியானது ட்ரெய்லர்!

  • March 8, 2023 / 08:31 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விடுதலை’. இதில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் பார்ட் 1-ன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus