சூரி – விஜய் சேதுபதியின் ‘விடுதலை 1 & 2’வுக்காக வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • June 1, 2023 / 08:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘விடுதலை’. இதில் பார்ட் 1 கடந்த மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, இயக்குநர் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதன் இரண்டாம் பாகத்துக்கான பேலன்ஸ் ஷூட்டிங்கை வருகிற ஜூன் 5-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பார்ட் 1 & 2-வுக்கு சேர்த்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags