தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் நடிப்பில் “ஆடுகளம்” திரைப்படத்தை இவர் இயக்கினார். இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு “விசாரணை” என்ற படத்தை இவரே தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் மீண்டும் தனுஷ் நடிப்பில் “வடசென்னை” படத்தையும் இவரே தயாரித்து இயக்கி அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
கடைசியாக இவர் மீண்டும் நடிகர் தனுஷுடன் இணைந்து “அசுரன்” படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” மற்றும் நெட்பிளிக்ஸில் வெளிவரவுள்ள ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.
தற்போது இந்தி தெரியாது போடா.. நான் தமிழ் பேசும் இந்தியன் டா.. என்ற வாசகம் உள்ள டீசர்ட்களை பிரபலங்கள் அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது, அதை தன் மகனுடன் சேர்ந்து வெற்றிமாறனும் தற்போது வெளியிட்டுள்ளார்.
Director @VetriMaaran & his son #StopHindiImposition pic.twitter.com/Lvf8Q8jzvD
— Done Channel (@DoneChannel1) September 8, 2020