வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணையும் திரைப்படத்தின் டைட்டில்!

  • December 4, 2020 / 07:52 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார் இயக்குனர் வெற்றிமாறன்.

தற்போது இவர் நடிகர் சூரியுடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘துணைவன்’ என்ற கதையை படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி முதல் சத்தியமங்கலம் காடுகளில் படம் பிடிக்கப்படும் என்றும் தற்போது தகவல் வந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்தால் நடிகர் சூரிக்கு பல விருதுகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களுக்குள் முடிப்பதற்கு திரைப்பட குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது இந்த படத்தின் டைட்டில் இந்த படத்தின் கதையை தழுவி “துணைவன்” என்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus