Ritika Singh : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘வேட்டையன்’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!
January 22, 2024 / 01:00 PM IST
|Follow Us
2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான படம் ‘இறுதிச்சுற்று’. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்திருந்தார். ரியல் லைஃபில் கிக் பாக்ஸரான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படத்திலும் பாக்ஸராக வலம் வந்திருந்தார்.
‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் ரித்திகா சிங். இவர் தமிழ், ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில், இவர் நடித்த ‘கொலை’ என்ற படம் வெளியானது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வந்த இந்த படத்தை பாலாஜி.கே.குமார் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடித்திருந்தார்.
இப்போது ரித்திகா சிங் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.