தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே’ போன்ற பல வெற்றிப் படங்கள் வெளி வந்துள்ளது. இப்போது, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பேச்சலர்’ மற்றும் ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான லாஸ்லியா நடிக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
தற்போது, ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ‘ப்ளாக் டிக்கெட் கம்பெனி’ நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு ‘விக்டிம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. ஆந்தாலஜி படமான இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், சிம்பு தேவன், எம்.ராஜேஷ் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்குகின்றனர்.
இதனை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் குறும்படத்தில் பிரசன்னா, அமலா பால், க்ரிஷ்ஷும், இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கும் குறும்படத்தில் தினேஷும், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் குறும்படத்தில் நட்டி, ப்ரியா பவானி ஷங்கரும், இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் குறும்படத்தில் தம்பி இராமையா, நாசரும் நடித்து வருகிறார்களாம்.
Very true @menongautham sir
But, do you all know what victimized @chimbu_deven @rajeshmdirector @beemji and @vp_offl ? pic.twitter.com/AM15PDWDhP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 1, 2020