நடிப்பு திறமை மட்டும் போதாது- வித்யா பிரதீப் உருக்கம்!

  • June 23, 2020 / 12:34 PM IST

“அவள் பெயர் தமிழரசி” படத்தின் மூலம் 2010ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானவர் வித்யா பிரதீப். இவர் சினிமா துறையில் தனக்கு கிடைத்த ஆறு ஆண்டு கால கசப்பான அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.

இவர் சைவம் ,பசங்க 2 ,தடம் ஆகிய படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் 2018 ஆம் ஆண்டு”நாயகி” என்று சின்னத்திரை சீரியலில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

கடைசியாக மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த “தடம்”படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வித்யா நடித்திருந்தார். இதை தொடர்ந்து ஜே.ஜே.வெஃட்ரிக் இயக்கத்தில் வெளிவந்த “பொன்மகள்வந்தாள்”படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தடம் படத்தில் மகிழ்திருமேனியுடன் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி பகிர்ந்த பொழுது” தடம் படத்திற்கு முன்பு என் வாழ்க்கையில் ஒரு மோசமான காலகட்டம் இருந்தது. நான் அதற்கு முன்பு 6 படங்களுக்கு ஒப்பந்தமாகி சில அண் புரோபஷனல் காரணங்களுக்காக நீக்கப்பட்டேன். எனக்கு சினிமா ஒத்து வராது என்று முடிவுசெய்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். இதற்குப் பின்னர் ஒருநாள் காஸ்டிங் டைரக்டர் ஸ்ருதி எனக்கு போன் செய்தார். இயக்குனர் மகிழ் சாரை அவரது அலுவலகத்தில் தடம் படத்திற்காக சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது பெரிதாக நம்பிக்கை இல்லை என்று நான் செல்லவில்லை. மீண்டும் மறுநாள் காலை மகிழ் சார் அலுவலகத்திலிருந்து எனக்கு கால் வந்தது. பின்பு நான் ஆடிஷனுக்குச் சென்றேன். பல மணி நேரம் நடந்த ஆடிஷனுக்கு பிறகு என்னை தேர்வு செய்தார்கள். மேலும் அவர் இந்த ரோலுக்காக பல மாதங்களாக ஆடிஷன் நடத்தி வருவதாகவும். எனது கண்கள் பவர்ஃபுல்லாக இருப்பதால் இந்த ரோலுக்கு சரியாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த படப்பிடிப்பின்போது எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைப்பார் மகிழ் சார். இவரால் தான் மீண்டும் என்னால் சினிமா துறையில் உயர முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்” திறமையாளர்கள் மேலே வருவதற்கு சில காலங்கள் ஆகும். என்னைப்போல் எந்தவித உதவியும் இல்லாமல் சினிமா துறைக்கு வருபவர்கள் மிகவும் மோசமாக கஷ்டப்பட வேண்டி இருக்கும். உங்களை ஒதுக்கி வைப்பார்கள் கவனிக்க மாட்டார்கள் ஏன் ஆர்டிஸ்ட் என்று கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பின்பற்றவில்லை என்பதற்காக. ஆனால் உங்களுக்கு நடிக்க விருப்பமிருந்தால் உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்,உங்களால் தாக்குபிடிக்க முடியும். அப்படி நடக்கும் பொழுது சிறு வெற்றி கூட உங்களுக்கு பெரியதாய் தெரியும். மேலும் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாய் வாழ்வதை தவிர வேறு எதுவும் சிறந்த பொக்கிஷம் கிடையாது” என்று வித்யா பிரதீப் உருக்கமாக கூறியுள்ளார்.

தற்போது வித்யா பிரதீப் அனிதா இயக்கத்தில் வெளிவர உள்ள “ஒத்தைக்கு ஒத்தை” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரியா இயக்கத்தில் வெளிவர உள்ள “அசுரகுலம்” படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதையான “தலைவி”படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus