நவம்பர் மாதம் வெளியாகும் வெற்றிமாறன் படம் !

  • October 5, 2022 / 10:40 AM IST

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக ரெட் ஜெயின்ட் மூவிஸ் & ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது.

பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆர்வலர்களிடையே பெரிய அளவினில் அலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீடு தற்போது பல திரைப்படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருப்பதால், விடுதலை திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையுமென தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நம்புகிறார்.

இந்நிலையில் விடுதலை படத்தை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திரைக்கு கொண்டு வரலாம் என்ற படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . இதனால் வெற்றிமாறன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus