அழகாக பாட்டு சொல்லி தரும் இளையராஜா!

  • February 7, 2023 / 01:43 PM IST

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன் . இந்த படம் பெரிய அளவில் பெற்றது . அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வருகின்ற படம் விடுதலை . இந்த படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார் . எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . விஜய் சேதுபதி , இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் , ராஜீவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது .

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது . இந்த பாடலை தனுஷ் பாடி உள்ளார் . இதற்கு தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது . அதில் தனுஷுக்கு இளையராஜா பாடல் பாட சொல்லித் தருகிறார்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus