‘விஜய் 65’ படத்தில் வித்யூத் ஜாம்வாலா வில்லன்?… அவரே போட்ட ட்வீட்!

  • April 2, 2021 / 02:41 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே. இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்தது.

நேற்று முன் தினம் (மார்ச் 31-ஆம் தேதி) இப்படத்துக்கான பூஜை போடப்பட்டது. இந்நிலையில், இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வித்யூத் ஜாம்வால் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக வித்யூத் ஜாம்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கும் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருப்பினும் பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus