தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.
ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். இவர்கள் காதல் மலர்ந்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “நானும் ரவுடிதான்” படத்தில் நயன்தாரா நடித்த போதுதான். தற்போது இந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக விக்னேஷ் சிவன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இவரும் நயன்தாராவும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “வாழ்க்கை என்பது எப்பொழுதும் இருக்கும் நன்மையில் நம்பிக்கை வைப்பதுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் இவர் தன் கேரியரில் வந்த நல்ல படம் குறித்தும், இவர் வாழ்வில் நயன்தாரா வந்ததை குறித்தும் கூறியிருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.