நயன்தாரா – விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்பொழுது ?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரவுடி தான் . இந்த படம் உருவாகி கொண்டு இருந்த பொழுதே விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராக்கும் காதல் ஏற்பட்டது . இந்த படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணியில் நீண்ட நாட்களாக படம் வரவில்லை . இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் .

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது .ஆனால் இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு அறிவிக்கவில்லை .

ஆனால் தற்போது விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளா அல்லது வெளிநாட்டில் இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது .

இவர்களது நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடைபெற்றது . அதுபோலவே திருமணம் நடைபெறுமா அல்லது பிரமாண்டமாக நடத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்து உள்ளது .

Share.