தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

  • September 27, 2023 / 11:06 AM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஜவான்’ படம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸானது.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

தற்போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus