Nayanthara & Vignesh Shivan : தனது மனைவி நயன்தாராவுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

  • November 18, 2023 / 07:38 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி’, ‘அன்னபூரணி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 18-ஆம் தேதி) நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர். தற்போது, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடனான ஸ்டில்லை ஷேரிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus