தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவரின் புதிய படமான ‘துணிவு’ வருகிற ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவிருக்கிறது.
இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில், அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கவிருக்கிறாராம். மேலும், அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளனர். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார், ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 17-ஆம் தேதி முதல் மும்பையில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க ‘கைதி’ படம் மூலம் ஃபேமஸான அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.