தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.
ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.
அப்படி ஏற்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் சிம்புவுடன் நேர்ந்த காதல். சமீபத்தில் இவரும் சிம்புவும் இணைந்து நடித்த வல்லவன் திரைப்படத்தின் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிம்பு ரசிகர்கள் இணையதளத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன் இந்த புகைப்படங்களை கண்டு சிறிது மன உளைச்சலில் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். சிம்பு இயக்கத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் தான் வல்லவன். இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவரும் மிகுந்த காதலில் இருந்ததால் இவர்கள் நெருக்கமாக இருக்கும் பல காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை இதுதான் அந்த மன உளைச்சலுக்கு காரணமா என்றும் பலர் கலாய்த்து வருகிறார்கள்.