விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவரும் காதலிப்பதற்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைந்திருக்கும். எப்போதெல்லாம் ரசிகர்களும், மக்களும் நயன்தாராவை பற்றி மறந்து விடுகிறார்களோ, அப்போதெல்லாம் ஒரு போட்டோ அல்லது, வீடியோவை இருவரில் யாரேனும் ஒருவர் வெளியிடுவது வழக்கம்.
இதன்படி தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் காட்சியின் நுணுக்கங்களை எப்படி நடிக்க வேண்டும் என்று சிரித்து கொண்டு சொல்வதும், அதனை அவரும் சிரித்து கொண்டு கேட்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதை பார்க்கும் ரசிகர்கள், உஷார் பண்ணதை எப்படி வெட்கமே இல்லாமல் வீடியோ எடுத்து போடுறாங்க பாரு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.