சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • February 5, 2021 / 02:53 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா. நயன்தாராவும், இவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இணைந்து தங்களது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள புதிய தமிழ் படம் ‘கூழாங்கல்’.

இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க திறமையான புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

இந்நிலையில், 50-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் நேற்று திரையிடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. இவ்விழாவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் ‘கூழாங்கல்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus