சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவுக்கு முதல் பட வாய்ப்பு அமைந்தே தமிழ் சினிமாவில் தான். அது தான் ‘முகமூடி’. இந்த படம் ஹிட் ஆகாமல் போனதால் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.
ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை ஹீரோயினாக வலம் வர வைத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்படி அடித்த ஜாக்பாட்டில் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோஷம், முகுந்தா, துவ்வாட ஜெகன்னாதம், சாக்ஷ்யம், அரவிந்த சமீதா வீர ராகவா, மகர்ஷி, கட்டாலகொண்டா கணேஷ், அல வைகுந்தபுரமுலோ’ மற்றும் ஹிந்தியில் ‘மொகெஞ்ச தாரோ, ஹவுஸ்ஃபுல் 4’ என படங்கள் குவிந்தது.
இப்போது பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ (தமிழ்/தெலுங்கு/ ஹிந்தி / மலையாளம்), ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ (தெலுங்கு), ‘ஆச்சார்யா’ (தெலுங்கு), ‘விஜய் 65’ படம் (தமிழ்), ‘சர்கஸ்’ (ஹிந்தி) என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது, அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் நடிகை பூஜா ஹெக்டே தினமும் வீட்டில் அவரே சமைத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை பூஜா ஹெக்டேவே இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், சமைப்பது போல் ஒரு ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார்.