தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார். இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 20-ஆம் தேதி ஆரம்பிக்கவும், படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிடவும் ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்துக்கு ‘ரெட்ட தல’ என டைட்டில் வைக்கலாமா? என முருகதாஸ் யோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், சில வருடங்களுக்கு முன்பு இதே டைட்டிலில் ‘தல’ என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வரும் நடிகர் அஜித்தை வைத்து முருகதாஸ் பண்ணாமல் மிஸ் ஆன அதே கதையில் தான் இப்போது விஜய் நடிக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.