விஜய் – நெல்சன் காம்போவில் உருவாகும் ‘தளபதி 65’… இசையமைப்பாளர் இவராமே!

  • November 30, 2020 / 09:09 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த சில மாதங்களாக தகவல் வந்த வண்ணமிருந்தது.

பின், திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். அதன் பிறகு இப்படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போது, இந்த படத்துக்கு இசையமைக்க ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ‘கத்தி, மாஸ்டர்’ என இரண்டு விஜய் படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus