ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பிறகு ‘விஜய் 66’… ரஜினி, அஜித் பட இயக்குநருடன் கூட்டணியாமே!

  • October 13, 2020 / 05:50 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்நிலையில், விஜய்யின் புதிய படமான ‘தளபதி 66’ தொடர்பாக செம்ம மாஸான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘தல’ அஜித்தை வைத்து ‘வீரம், வேதாளம், விஸ்வாசம்’ போன்ற ஹிட் படங்களை கொடுத்த சிவா, இப்போது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus