தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது.
‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கவிருக்கிறார். இதில் விஜய் கேங்ஸ்டராக வலம் வரப்போகிறாராம்.
மேலும், ஹீரோயினாக த்ரிஷாவும், முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், விஷால், நிவின் பாலி ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார், கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ ரூ.160 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.