தொடங்கியது ‘விஜய் 67’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்… தீயாய் பரவும் வீடியோ!

  • February 3, 2023 / 08:02 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. இந்த படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதில் விஜய் கேங்ஸ்டராக வலம் வரப்போகிறாராம். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது, இந்த படத்தின் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் காஷ்மீரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் அறிவித்ததுடன், காஷ்மீருக்கு விமானத்தில் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus