சரத்குமாருக்கு பதிலாக நடித்த விஜய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 13, 2022 / 03:17 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பகவதி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ரீமா சென் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.வெங்கடேஷ் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சரத்குமாரை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் சரத்குமாரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus