பொங்கல் ரேஸில் ‘தளபதி’ விஜய் மற்றும் ‘தல’ அஜித்துடன் மோதப்போகும் பிரபாஸ்!
September 29, 2022 / 01:16 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறாராம்.
இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், பிரபாஸுக்கு தம்பியாக பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது.
இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகுகிறது. இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் டீசரை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதியும், படத்தை அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 12-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நாளில் விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Our magical journey is now yours to experience & love! ✨
The much awaited #AdipurushTeaser and the first poster of our film will be launched on Oct. 2! Venue – Bank Of Sarayu, Ayodhya, UP! #Adipurush releases IN CINEMAS on January 12, 2023 in IMAX & 3D! pic.twitter.com/D5MPSHjcsn
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.