தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். ‘தளபதி’ விஜய் நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராஜாவின் பார்வையிலே’.
இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து இன்னொரு டாப் ஹீரோவான ‘தல’ அஜித்தும் நடித்திருந்தார். இதனை இயக்குநர் ஜானகி சௌந்தர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் இந்திரஜா, வடிவேலு, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் மொத்த வசூல் ரூ.1.90 கோடியாம்.