காஷ்மீர் செல்லும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ! என்ன காரணம் தெரியுமா ?

  • December 19, 2022 / 09:04 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படம் 2023 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . சிம்பு குரலில் வெளியான இரண்டாவது பாடலான ” தீ தளபதி ” பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் அடுத்த நடிக்க உள்ள படம் தளபதி 67 படத்தின் பூஜை சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்தது . இந்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் .

சில வாரங்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஷாலை சந்தித்தார் . அப்போது தளபதி 67 படத்தில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது . இந்நிலையில் அந்த வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது . இந்நிலையில் தளபதி 67 படப்பிடிப்புக்காக ஜனவரி மாதம் விஜய் மற்றும் லோகேஷ் காஷ்மீர் செல்ல இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது .

இது ஒரு புறம் இருக்க கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது . தொடர்ந்து தமிழ் படங்கள் காஷ்மீரில் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus