தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.
சமீபத்தில், விஜய் – பிரபல இயக்குநர் வெற்றிமாறனுடன் ஒரு புதிய படத்துக்காக கூட்டணி அமைக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் மீடியாவுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூட “இந்த லாக் டவுன் டைமில் விஜய் சாருக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கை துவங்கி விட்டேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், விஜய்யின் ரசிகர் ஒருவர் வெற்றிமாறன் படத்துக்கு ‘மருதீரன்’ என்ற டைட்டிலில் ஒரு போஸ்டரை டிசைன் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சூப்பராக இருக்கும் இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
https://twitter.com/thalapathykathi/status/1306977223816085504
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.