‘பிச்சைக்காரன் 2’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நடிகர் விஜய் ஆண்டனிக்கு படுகாயம்!

  • January 17, 2023 / 01:47 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதன் ஷூட்டிங் மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட படகு விபத்தினால் நடிகர் விஜய் ஆண்டனிக்கு படுகாயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, விஜய் ஆண்டனியை கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus