சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் ‘டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வெடி, வேலாயுதம்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் ஹீரோவாக ‘நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலைகாரன், கொலை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரோமியோ’ என 6 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனியின் வீட்டில் அவரது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. 12-ஆம் வகுப்பு படிக்கும் மீரா மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.