விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் VFX-க்காக மட்டுமே இத்தனை கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறதா?

  • July 19, 2023 / 11:06 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என 6 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் த்ரில்லர் ஜானர் படமான ‘கொலை’யை ‘விடியும் முன்’ புகழ் இயக்குநர் பாலாஜி.கே.குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்திகா சிங், மீனாக்ஷி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், வெளியான இதன் பாடல்கள் மற்றும் 2 ட்ரெய்லர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஜூலை 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் ரூ.20 கோடி என்றும், அதில் VFX-க்காக மட்டுமே ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus