விஜய் ஆண்டனியின் ‘கொலை’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • July 22, 2023 / 06:56 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என 6 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் த்ரில்லர் ஜானர் படமான ‘கொலை’ நேற்று (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குநர் பாலாஜி.கே.குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்திகா சிங், மீனாக்ஷி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இந்த படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.87 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus