விஜய் ஆண்டனியின் த்ரில்லர் படமான ‘கொலை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 21, 2023 / 02:50 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என 6 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் த்ரில்லர் ஜானர் படமான ‘கொலை’ இன்று (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குநர் பாலாஜி.கே.குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்திகா சிங், மீனாக்ஷி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus