விஜய் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்- பிறந்தநாள் ட்ரீட்!

  • July 24, 2020 / 01:13 PM IST

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர், பாடல் எழுத்தாளர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு என்று தனி பாணி வைத்திருக்கிறார்.

இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் ஆண்டனி தனது பிறந்தநாள் ட்ரீட் ஆக, ஏற்கனவே கூறியிருந்தவாறு தனது புகழ்பெற்ற படமான பிச்சைக்காரன் படத்தின் சிக்குவலான “பிச்சைக்காரன் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களிடம் ஏற்கனவே அவர் கணக்கெடுத்த பொழுது பிச்சைக்காரன் படத்தின் சிக்குவல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் ரிலீஸாகும் என்று அநேகம் பேர் ஊகித்திருந்தார்கள்.

2012ஆம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான “நான்” படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்த விஜய் ஆண்டனி, 2005 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான “சுக்கிரன்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இசையமைப்பாளராக பிரபலமான பின் விஜய் ஆண்டனி நடிக்க தொடங்கி, பின்பு தயாரிப்பாளரானார்‌. இவர் நடிப்பில் வெளியான முதல் படமான “நான்” படத்திலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, கொலைகாரன் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

தற்போது விஜய் ஆண்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன்” என்ற படத்திலும், நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி அனந்தகிருஷ்ணன், விஜய்மில்டன், பாலாஜி.கே.குமார் ஆகியோரின் இயக்கத்தில் தனித்தனி படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்த மூன்று படங்களின் ப்ரீபுரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus