விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!

  • September 24, 2020 / 07:00 PM IST

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர், பாடல் எழுத்தாளர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு என்று தனி பாணி வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ஏற்கனவே கூறியிருந்தவாறு தனது புகழ்பெற்ற படமான பிச்சைக்காரன் படத்தின் சிக்குவலான “பிச்சைக்காரன் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

2012ஆம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான “நான்” படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்த விஜய் ஆண்டனி, 2005 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான “சுக்கிரன்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இசையமைப்பாளராக பிரபலமான பின் விஜய் ஆண்டனி நடிக்க தொடங்கி, பின்பு தயாரிப்பாளரானார்‌. இவர் நடிப்பில் வெளியான முதல் படமான “நான்” படத்திலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, கொலைகாரன் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

தற்போது விஜய் ஆண்டனி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன்” என்ற படத்திலும், நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தற்போது அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்த படத்தில் “மீசைய முறுக்கு” படத்தில் நடித்திருந்த ஆத்மிகா நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் நடந்து முடிந்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் பேக்டரி தயாரிப்பதாகவும், இந்தப்படத்திற்கு “கொடியில் ஒருவன்” என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus